திங்கள், 17 பிப்ரவரி, 2014

2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி-நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமன ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012 ல் நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றபின் இணையான பட்டம் இல்லை எனக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட சிலர் வழக்குமன்றத்தை நாடினர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதனை அமுல்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சம்மந்தபட்டவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அவர்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு நேரில் சென்று பணயிடத்தை தெரிவு செய்தபின் இணைஇயக்குனரால் பணி நியமன ஆணை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக