தமிழகத்தில் மின்சக்தி நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு தொழில் வளர்ச்சி மேம்பட்டுள்ளது என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
சென்னையில் 10 இடங்களில் நவீன வரி வசூல், கட்டண வசூல் மையம் அமைக்கப்படும்.
நீதிமன்ற நிர்வாக மேம்பாட்டுக்கு ரூ.783.02 கோடி ஒதுக்கீடு.
தமிழக சிறைச்சாலைகளை சீரமைக்க ரூ.194.66 கோடி நிதி ஒதுக்கீடு.
சாலைப் பாதுகாப்பிற்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு.
தீயணைப்பு, மீட்புபணிகள் துறைக்கு ரூ.189.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
காவல்நிலைய கட்டிடங்கள், குடியிருப்புகள் கட்ட ரூ.571 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு: காவல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5,168 கோடியாக அதிகரிப்பு. புகார் மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக