கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
வேளாண் வளர்ச்சி திட்டங்கள்: வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
திருத்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கருக்கு விரிவுப்படுத்தப்படும்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.681 கோடி செலவில் குடிநீர் தொகுப்பு அமைக்கப்படும்.
4887 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.
பேரிடர் சமாளிப்புத் திட்டத்திற்கு ரூ.106.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ் வளர்ச்சிக்கு ரூ.39.29 கோடி நிதி ஒதுக்கீடு. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகம் முழுவதும் ஆதரவற்றோருக்கு 65 புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக