கூவம் நதியை சீரமைக்க ரூ.3,833.62 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னையில் புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின் ரூ.2000 கோடி கடனை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு.
கூவம் நதியை சீரமைக்க ரூ.3,833.62 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் 5 ஆண்டுகளில் முடிக்கப்படும். திட்ட செயலாக்கத்தின்போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுகுடியமர்த்தம் செய்ய ரூ. 2.077 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க ரூ.119.98 கோடி நிதி ஒதுக்கீடு. அணைகள் புனரமைப்புக்கு ரூ.329.65 கோடி நிதி ஒதுக்கீடு.
மீனவர்களுக்கு நிவாரண நிதி: மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களின் நிவாரணத்திற்காக வழங்க ரூ.105 கோடி ஒதுக்கீடு. பூம்புகாரில் புதிய மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக