வரும் நிதியாண்டில் ரூ.1110 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வித் துறைக்கு ரூ.3627.93 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
சென்னை மாநகராட்சியில் புதிதாக 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை அமைக்கப்படும்.
வரும் நிதியாண்டில் ரூ.1110 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வித் துறைக்கு ரூ.3627.93 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகம் முழுவதும் 118 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
64 ஆரம்ப சுகாதார மையங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
770 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும்.
சென்னை, ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு பிரிவுக்கு ரூ.75 கோடியில் பலமாடி கட்டடம் கட்டப்படும்.
சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 11 இடங்களில் வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் அமைக்கப்படும்.
தேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்கு மாநில அரசின் பங்கிற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.
இந்திரா வீட்டுவசதி திட்டத்தில் நடப்பாண்டில் 1,6,000 வீடுகள் அமைக்கப்படும்.
விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க ரூ.499.16 கோடி நிதி ஒதுக்கீடு.
நெசவாளர்களுக்கான பசுமை வீடுகளுக்கு கூடுதலாக ரூ.168 கோடி நிதி ஒதுக்கீடு.
சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
60 ஆயிரம் சூரிய ஒளி மின்சக்தி தெருவிளக்குகள் அமைக்க ரூ.46.58 கோடி நிதி ஒதுக்கீடு.
சூரிய ஒளி மின்சக்தி கொண்ட 60,000 பசுமை வீடுகளுக்கு 1,260 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. இளைஞர்கள் திறனை மேம்படுத்த நெல்லை, திருவள்ளூரில் மையங்கள் அமைக்கப்படும்.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக