35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
36,233 மதிய உணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு அல்லது நீராவி சமையல் அடுப்பு வழங்கப்படும்.
35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.1,475.42 கோடி நிதி ஒதுக்கீடு.
உழவர் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.716.77 கோடி நிதி ஒதுக்கீடு.
சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.55.53 கோடி நிதி ஒதுக்கீடு.
திருநெல்வேலி மாநகராட்சி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு.
விளையாட்டு வீரர் விடுதிகள், கட்டமைப்புகளுக்கு ரூ. 146.64 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் ரூ.197.10 கோடியில் 1747 குடியிருப்புகள் கட்டப்படும்.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக