ரூ. 2.8 கோடி செலவில் தமிழகத்தில் புதிதாக 10 கல்லூரி விடுதிகள் கட்டப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு வரும் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
ரூ. 2.8 கோடி செலவில் தமிழகத்தில் புதிதாக 10 கல்லூரி விடுதிகள் கட்டப்படும்.
பயிர்க் காப்பீட்டிற்காக ரூ.242.54 கோடி நிதி ஒதுக்கீடு.
தேசியத் தோட்டக்கலை இயக்கம் 22 மாவட்டங்களில் ரூ115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 323 கோடி ரூபாய் செலவில் பல்வேறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
நீலகிரி மாவட்டத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, உதகமண்டலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய்க் கோட்டம் உருவாக்கப்படும்.
சென்னை மாநகரத்தில் மேலும் 200 பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
கூடுதலாக, 2,000 பொதுச் சேவை மையங்கள் தனியார்-பொது பங்களிப்பு முறையில் தொடங்கப்படும்.
புதுவாழ்வுத் திட்டத்திற்காக ரூ.49.05 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திற்கென ரூ.253.92 கோடி நிதி ஒதுக்கீடு.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு.
12,000 பயணாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும்.
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.105 கோடி நிதி ஒதுக்கீடு.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வரும் அக்டோபரில் நடத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக