பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
மாநிலத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி அளித்திட, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஓய்வூதியப் பலன்களுக்காக 16,021 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.4,000 பராமரிப்பு உதவித் தொகை அளித்திட அரசு முடிவு செய்துள்ளது.
தேவைப்படும் இடங்களில், 17.50 கோடி ரூபாய் செலவில் பணிபுரியும் பெண்கள் தங்கும் 14 விடுதிகள் புதிதாக அமைக்கப்படும்.
திருமண உதவித் திட்டங்களுக்காக 751.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 204 கோடி ரூபாய் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் வாங்குவதற்காகவும், 547.09 கோடி ரூபாய் பண உதவிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
.
கடுமையான நோய் இருப்பதாக கண்டறியப்படும் குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் சேவைகளை அளித்திட, மாவட்டந்தோறும் ஒரு ஆரம்ப நிலை சிகிச்சை மையம் நிறுவப்படும்.
அடிப்படைத் தேவைகள் திட்டத்திற்காக 186.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதிக்காக ரூ.3,734 கோடி நிதி ஒதுக்கீடு.
கிராமங்களில் திடக் கழிவு மேலாண்மைக்காக, ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பங்கீட்டிற்காக 5,168.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பேருந்துப் போக்குவரத்தின் திறனை உயர்த்த, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து தகவல் அமைப்பு முறை செயல்படுத்தப்படும்.
ஜவஹர்லால்நேரு தேசிய நகந்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 200 கோடி ரூபாய் செலவில் பழைய பேருந்துகளை மாற்ற 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
சாலை கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு ரூ.2,800 கோடி ரூபாயாக மேலும் உயர்த்தப்படும்.
1,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும், 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கே.எப்.டபுள்யூ. என்ற ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனத்தின் உதவியோடு, காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றிடத் தேவையான பசுமை மின்சக்தி வழித்தடங்களை ரூ.1,593 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் நடவடிக்கை.
பாரம்பரிய நீந்நிலைகளைச் சீரமைப்பதற்காக 160 பணிகளை மேற்கொள்ள, ரூ.86.28 கோடி நிதி ஒதுக்கீடு.
ஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதியதாகத் தொடங்கப்படும்.
நபார்டு மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் கீழ் உள்ள நிதியைப் பயன்படுத்தி பல்வேறு பால் பண்ணைகளின் திறனை உயர்த்த ரூ. 198.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
1.5 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் வழங்க ரூ. 198.25 கோடி ஒதுக்கீடு.
என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக