குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள தட்டச்சர் பணியில் காலியாக உள்ள 431 இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 19 ஆம்தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள தட்டச்சர் பணியில் காலியாக உள்ள
இடங்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்றது.இந்தத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டும் பணியில் சேராதது உள்பட பல்வேறு காரணங்களால் 431 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு, ஏற்கெனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியானவிண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ((www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு ஆகியன வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் பாரிமுனை பஸ் நிலையம் அருகேயுள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும். பிப்ரவரி 20 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக