ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கல்வித்துறை செயலாளர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

திருமங்கலம் ஓய்வு தலைமையாசிரியர் வேலுச்சாமி தாக்கல் செய்த மனு: தேர்வு நிலை,
சிறப்பு நிலை தகுதியுடன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் 12 பேருக்கு, 5
வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் வழங்க, 2011 செப்டம்பரில் ஐகோர்ட் பெஞ்ச்
உத்தரவிட்டது. ஆனால், 5 பேருக்கு மட்டுமே, அரசு வழங்கியது. கோர்ட்
உத்தரவை அவமதித்ததாகக் கருதி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சதீஷ் கே. அக்னிகோத்ரி, ஆர்.சுதாகர் கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல், 'பெஞ்ச் உத்தரவை,மறு ஆய்வு செய்யக்கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்,' என்றார். நீதிபதிகள், 'பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்,' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக