வியாழன், 4 செப்டம்பர், 2014

ஆசிரியர்கள் நியமனத்தில் உச்சகட்ட குழப்பம்-ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கலக்கம்

ஆசிரியர்கள் நியமனத்தில் உச்சகட்ட குழப்பம்....
பள்ளிக்கல்வித் துறையில், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில், உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'புதியஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், பணியில் சேர அனுமதிக்கக் கூடாது' என,சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவால், ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள்,கலக்கம் அடைந்துள்ளனர்.பணி
நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவை பெறாமல்
உள்ளவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு)முறையை கொண்டு வந்ததில் இருந்து, தமிழகத்தில், தொடர் குளறுபடி நடந்து வருகிறது.

காரணம் என்ன? கடந்த 2012, அக்., 5ம் தேதி, ஆசிரியர் நியமனம் தொடர்பாக, முதல் அரசாணை வெளியானது. அதில், 'வெயிட்டேஜ்'மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது.அதன்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், பிளஸ் 2,ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு, பட்டப் படிப்பு, பி.எட்., போன்ற படிப்புகளில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 40மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், தகுதியான ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என,அறிவிக்கப்பட்டது. இந்த முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர். 'இந்தஅரசாணை, அறிவியல் பூர்வமானது அல்ல; எனவே, யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல், புதிய அரசாணையை வெளியிட வேண்டும்' என, அந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.மேலும், தமிழக அரசுக்கு, புதிய கணக்கிடும்முறை ஒன்றையும், உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்று, தேர்வர் பெறும்ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யும் புதியமுறையை, கடந்த மே 30ம் தேதி, புதிய அரசாணையாக, கல்வித்துறை வெளியிட்டது. இதற்கிடையே, டி.இ.டி., அல்லாத பிற
கல்வி தகுதிகளுக்கு வழங்கப்படும், 40 மதிப்பெண்ணுக்கான, 'வெயிட்டேஜ்' முறையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம்,மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

தடை: இந்நிலையில், ஆக., 10ம் தேதி, ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதை தொடர்ந்து, கடந்த ஆக., 30ம் தேதி முதல், பணி நியமனம் நடந்து வருகிறது. நேற்றுடன் ஐந்து நாள் நடந்த கலந்தாய்வில், 5000த் திற்கும்மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, பணிநியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.நேற்று, மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கு, கலந்தாய்வு நடந்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல், 2:00 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றம்,
மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு குறித்த தகவல், கல்வித்துறைக்கு கிடைத்தது.'புதிய ஆசிரியர்களுக்கு,கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், அவர்கள் பணியில் சேர, கல்வித்துறை அனுமதிக்கக் கூடாது' என, மதுரை கிளை, இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.இதனால், அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த கல்வித்துறை அதிகாரிகள், நீதிமன்றஉத்தரவால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து, உயர் அதிகாரிகளிடம் விளக்கினர்.
பணி நியமனஉத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவு பெற காத்திருப்பவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ'என, அச்சம் அடைந்துள்ளனர். பணியில் சேர உடனடி தடை: கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது:தற்போதைய நிலை யில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, எதுவும் கூமுடியாது. நீதிமன்றத்தின் உத்தரவு விவரம் கிடைத்ததும், உயர் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி, அடுத்த முடிவு எடுக்கப்படும்.பணி நியமன கலந்தாய்வுக்கு, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, ஏற்கனவே அறிவித்தபடி,பணி நியமன கலந்தாய்வு, தொடர்ந்து நடக்கும். ஆனால், உத்தரவு பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக