ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

ஐஐடியும், நாஸ்காம் அமைப்பும் இணைந்து ஆன்லைன் கணினி சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது


என்பிடிஇஎல் நிறுவனம் 2 ஆன்லைன் கணினி சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. "பேசிக் எலெக்ட்ரிக்கல் சர்க்யூட்", "இன்ட்ரோடக் ஷன் டூ புரோகிராமிங் இன் சி" ஆகிய இரு படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் லாக்-ஆன் செய்து பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

பதிவு செய்ய கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தேர்வுக்கு மட்டும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். முதல் ஆன்லைன் படிப்பை (12 வார காலம்) சென்னை ஐஐடி பேராசிரியர் நாகேந்திராவும், இரண்டாவது படிப்பை (10 வாரங்கள்) கான்பூர் ஐஐடி பேராசிரியர் சத்யதேவ் நந்தகுமாரும் ஆன்லைனில் நடத்துவர்.

இறுதியில் ஐஐடியும், நாஸ்காம் அமைப்பும் இணைந்து சான்றிதழ் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக