சனி, 2 நவம்பர், 2013

முதுகலை தமிழ்த்தேர்வு எழுதியுள்ள தேர்வர்களுக்கு ஓர் வேண்டுகோள்

 டி.ஆர்.பியால் முதுகலை தமிழ்த் தேர்வு தவிர  மற்ற அனைத்து பாடத்தேர்வர்களுக்கும் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பும் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில் தமிழ் பாடத்துக்கு மட்டும் வழக்கு காரணமாக என்ன தீர்வு என்று தெரியாத நிலையில் தவிப்புடனும்  மனக்குழப்பத்துடனும்  இருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 12 தேதி மதுரை நீதிமன்ற பெஞ்ச் அனைவரும் பாதிக்காத வகையில் தீர்ப்பு வழங்கவேண்டும்என ஆவலுடன்  காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில் டி.ஆர்.பி தனி நீதிபதி முன் அளித்த அதே தீர்வையே வலியுறுத்துமா? அல்லது வேறு வகையான தீர்வை பரிந்துரைக்குமா? என்ற வினா அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
தேர்வு எழுதியவர்கள் அனைவரும் பாதிக்காத வகையில் இப்பிரச்சனைதீர்வு எவ்வாறு இருக்கலாம் என தங்கள் கருத்தினை velanthangavel@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தமிழ் Unicode font (latha) தட்டச்சு செய்து அனுப்பிவைத்தால் அது இத்தளத்தில் வெளியிடப்படும்
மேலும் டி.ஆர்.பி தனி நீதிபதி முன் அளித்த பிழையான 40 வினாக்கள்  (B SERIES) இத்தாளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் A,B,C,D அனைத்து வகை வினாத்தள்களில் தேர்வு எழுதியவர்களும். டி.ஆர்.பி யின் தற்காலிக விடைக் குறிப்பின்படி 150 க்கு தாங்கள் பெற்ற மதிப்பெண்கள்.  பிழையான 40 வினாக்களில்  மட்டும் தாங்கள் பெற்ற மதிப்பெண் என விவரத்தினையும் அனுப்பிவைத்தால் அது தொகுக்கப்பட்டு டி.ஆர்.பி தனி நீதிபதி முன் அளித்த தீர்வால் கடினமாக உழைத்து தேர்வு எழுதியவர்களுக்கு சாதகமா ? பாதகமா? என்பது  சரியாக ஆய்ந்து  இத்தளத்தில்  வெளியிடப்படும்.
1. பெயர்
2. மாவட்டம்
3. 150 க்கு பெற்ற மதிப்பெண்
4. பிழையான 40 வினாக்களில் மட்டும்  பெற்ற மதிப்பெண்
என தகவல் மின்அஞ்சல் முகவரிக்கு சரியான தகவலை அனுப்பவும்.
Sms மூலம் அனுப்ப விரும்புவர்கள் மேற்கண்ட வரிசையில் தகவல் அனுப்பவும்
Example: MURUGAN MADURAI 105  35
அனுப்பவேண்டிய MOB NO :7598299935


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக