செவ்வாய், 1 அக்டோபர், 2013

TRB PG TAMIL FLASH NEWS: JUDGEMENT DETAIL

TRB PG TAMIL CASE JUDGEMENT TODAY DELIVERD BY HONARABLE JUDGE NAGAMUTHU.
HE ORDERD TO CONDUCT  RE EXAM FOR PG TAMIL

IN HIS JUDGEMENT JUSTICE NAGAMUTHU ALSO MENTIONED THE HARD WORK NEED FOR THIS TRB EXAMINATION...AND FEEL THAT NO OTHER SOLUTION OTHER THEN RE EXAMINATION SHOULD MAKE DISCRIMINATION  TO THE CANDIDATES APPEARED FOR THE EXAM. HENCE HE ORDERD TO RE EXAM
டி .ஆர். பி யின்  ஆலோசனைகள்  

பிழையான  40 வினாக்களை  நீக்கிவிட்டு  110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது 

 அல்லது  பிழையான  40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை  அனைவருக்கும் வழங்குவது . அல்லது 110 வினாக்களுக்கு  பெற்ற மதிப்பெண்களை  150 க்கு  கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை 
அனைத்தையும்  நிராகரித்த நீதிபதி  
தீர்ப்பு  ஆணை  கிடைத்த  6 வாரங்களுக்குள்  தேர்வு  நடத்தப்பட  வேண்டும்.
புதிய விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படக் கூடாது. 
பழைய ஹால் டிக்கட்  இணையத்தளம் மூலம்  தரவிறக்கம்  செய்துகொள்ளலாம் .
என தீர்ப்பளித்தார்


DETAIL NEWS

 கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம்
முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப்
பி-யில் பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள்
வரை இருந்த பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும்
கூறி, இதற்காக மறு தேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண்
இதற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி            என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்
செய்தார்., 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில்
நடைபெற்று வந்தது. இதில், மறு தேர்வு நடத்த  இன்று நீதிபதி உத்தரவிட்டார்.

 அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி, மறு தேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40மதிப்பெண்களை நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும்,அல்லது 40 மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம்

என்றும் ஆலோசனை கூறினார். ஆனால் இந்தஆலோசனைகளை நீதிபதி ஏற்க              மறுத்துவிட்டார்.   4  பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில்
மட்டுமே பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள்
அனைத்துமே பிழை என்றால் அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால்
ஒரு பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே என்பதால் பாதிப்பு கணக்கிடப் படும். எனவே,   

                     இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த
வேண்டும். இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச்
சீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில்
இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய
விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார் நீதிபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக