புதன், 1 ஜனவரி, 2014

இந்திய முகத்தைக்காட்டிய முகம் இது....


ஏனென்றால், 1947-ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டதுபோல் தோற்றம்கொண்டிருந்த இந்திய வரலாற்றை, அதன் எல்லா விதமான தொடர்ச்சிகளோடும் சொல்லியிருக்கும் ஒரே வரலாற்றாசிரியர் இவர்.

ஏனென்றால், தற்கால இந்திய வரலாற்றை அரசியல், சுற்றுச்சூழல், கிரிக்கெட், இசை ஆகியவற்றின் அடிப்படையில் அணுகி, மிக முக்கியமான வரலாற்று நூல்களைத் தனது 55 வயதுக்குள் எழுதியிருக்கிறார்.

ஏனென்றால், தற்கால இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றாசிரியராக அதுவும் இந்தியாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியராக உருவெடுத்திருக்கிறார்.

ஏனென்றால், இந்திய வரலாற்றை எழுதும்போது இந்தியாவின் குறைகளையும் மிக முக்கியமான பிரச்சினைகளையும் பாரபட்சமின்றி அணுகி எழுதினாலும், இறுதியில் ‘இந்தியா’ என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வரலாற்றாசிரியராக இருக்கிறார்.

ஏனென்றால், பலரும் எழுதித் தீர்த்த பிறகும் காந்தியின் வரலாற்றில் சொல்வதற்கு இன்னும் இருக்கிறது என்பதை ‘இந்தியாவுக்கு முந்தைய காந்தி’ (காந்தி பிஃபோர் இந்தியா), ‘காந்திக்குப் பிந்தைய இந்தியா’ (இந்தியா ஆஃப்டர் காந்தி) ஆகிய நூல்களில் நடுநிலை நோக்கோடு நிரூபித்திருக்கிறார். தொடர்ந்து காந்தியின் வரலாற்றை எழுதவும் போகிறார்.

”இந்தியா விடுதலை பெற்ற 60 ஆண்டுகளாக, ‘இன்னும் எவ்வளவு காலம் நாடு ஒன்றுபட்டிருக்கும், ஜனநாயக முறையும் அமைப்புகளும் நீடித்து இருக்கும்’ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், இந்த நாட்டில் நிலைக்கக்கூடிய ஏதோ ஒரு கட்டுமானம் காணப்படுகிறது. அதை இந்திய உணர்வு என்று மட்டுமே விளக்க முடியும். ஆசியாவின் தலைவிதியே இதன் வாழ்விலேதான் இருக்கிறது என்று நாம் நம்புவது, மிகையல்ல” - ராமச்சந்திர குஹா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக