செவ்வாய், 21 ஜனவரி, 2014

தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1339 பேர் தேர்ச்சி


தருமபுரியில் திங்கள்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ்கள்சரிபார்க்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சிப்
பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தருமபுரி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றஆசிரியர்களுக்கு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமையில் 8 குழுவினர் இந்தப்
பணியை மேற்கொண்டனர். தருமபுரி மாவட்டத்தில் தாள் 1-இல் 417 பேர், தாள் 2-இல் 922 பேர் எனமொத்தம் 1339 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. இந்தப்பணி வருகிற 27-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக