மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள பாடங்களைத் தவிர்த்து (Except for Botany, History, Commerce, Physics, Chemistry and Tamil Subject) மீதமுள்ள பாடங்களுக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 17 ல் நடைபெற உள்ளது.கூடுதல் பட்டியலில் புதியதாக இடம்பெற்றவர்கள்,ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள இயலாமல் போனவர்கள் மற்றும் நீதிமன்ற ஆணை பெற்றவர்கள் நீதிமன்ற ஆணையுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என டிஆர்பி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிட்டுள்ள புதிய பட்டியலின்படி பாடவாரியாக இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை
English -387
Mathematics -327
Zoology. -203
Geography -026
Economics. -275
Home Science - 01
Physical Education
Director Grade I -21
Micro -Biology. -33
Bio -Chemistry -16
Telugu. -02
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக