தமிழகம் முழுவதும் உள்ள 300 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்களை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் www.tn. gov.in என்ற இணையதளத்தில் இந்தக் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன. நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான குழு தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 8 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து புதிதாகத் தொடங்கப்பட்ட பள்ளிகள், கட்டண நிர்ணயத்தை மறுநிர்ணயம் செய்யக் கோரிய பள்ளிகளுக்கு இப்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குழு வட்டாரங்கள் தெரிவித்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக