ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஆசிரியர்கள் பணி  நியமனத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டுள்ளது முதல்வர்ஜெயலலிதா


 
.மத்திய அரசின் உத்தரவுப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களையே ஆசிரியராக நியமிக்க இயலும். எனவே, ஆசிரியர் பணியிடங்களை நிரப்பஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் 18,647 ஆசிரியர்கள்மற்றும் போட்டித் தேர்வின் மூலம் 2,273 ஆசிரியர்கள் என மொத்தம் 20,920 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில்பெறப்பட்ட மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது,
பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு தான். இந்த ஆசிரியர் நியமனத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை  தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக