அதன்படி,
திருவள்ளுவர் விருது–கவிஞர் யூசி (தைவான்)
தந்தை பெரியார் விருது –சுலோச்சனா சம்பத்
அண்ணல் அம்பேத்கர் விருது –பேராயர் எம்.பிரகாஷ்
பேரறிஞர் அண்ணா விருது –பண்ருட்டி ச.ராமச்சந்திரன்
பெருந்தலைவர் காமராசர் விருது –கி.அய்யாறு வாண்டையார்
மகாகவி பாரதியார் விருது –கு.ஞானசம்பந்தன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது –ராதா செல்லப்பன்
தமிழ்த்தென்றல்திரு.வி.க. விருது –அசோகமித்ரன்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது– வ. ஜெயதேவன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
மேற்காணும் விருதுகளை நாளை (15–ந்தேதி) சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜனவரி 26 ஆம் தலைமை செயலகத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவே விருதுகளை வழங்குவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல் அமைச்சரிடம் விருது பெற தமிழறிஞர்கள் விருப்பம் தெரிவித்ததால் ஜெயலலிதாவே வழங்குவதாகவும் தமிழ அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் விருது பெறும் தைவான் நாட்டை சேர்ந்ந்த கவிஞர் யுசி, நாளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக