தருமபுரியில் கம்பன் கழகத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு தியாகி ஜி.ஏ.வடிவேலு தலைமை வகித்தார். சைவ, சமய கலைக்
களஞ்சியத்தின் பதிப்பாசிரியர் ஆர்.செல்வகணபதி தருமபுரி கம்பன் கழகத்தைத் தொடக்கிவைத்துப் பேசினார். விழாவில் ஆர்.தாமரைச்செல்வன் எம்.பி. பேசியது: இன்றைய இளைய தலைமுறையினருக்கு கம்பன், வள்ளுவர் ஆகியோரை பற்றி அதிகளவில் தெரியவில்லை. தற்போது பெருகி வரும் ஆங்கில மோகமே இதற்குக் காரணமாகும். எனவே, மாணவர்களுக்கு கம்பர், வள்ளுவர் ஆகியோர் குறித்தும், அவர்கள் எழுதிய கம்ப ராமாயணம்,திருக்குறள் குறித்து கற்பிக்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை இளைய
தலைமுறையினர் பயில வேண்டும் என்றார் அவர்.
விழாவில், தகடூர் வேணுகோபால், வழக்குரைஞர் காந்தி ஆகியோர் கம்பர் திருவுருவப் படத்தை திறந்துவைத்தனர். "கம்பரும், கண்ணதாசனும்' , கவி ஈர்ப்பு மையமும் "கம்பராமாயணத்தில் சிறப்பிடம்பெறுவது சகோதர பாசமா அல்லது தாய் பாசமா? ' ஆகிய தலைப்புகளில் பட்டிமன்றமும் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக