வெள்ளி, 10 ஜனவரி, 2014

TRB PG :தமிழ் வழி இடஒதுக்கீட்டிற்கு    முதுகலை பட்டத்தையும் பி.எட் பட்டத்தையும் தமிழ் வழியில் படித்திருந்தால்  போதுமானத


முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீடு குறித்து வணிகவியல்  முதுகலை பட்டதாரிகள் பூங்கோதை மாரியம்மாள் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் தாக்கல் செய்த வழக்கில் நீதியரசர் நாகமுத்து முதுகலை பட்டத்தையும் பி.எட் பட்டத்தையும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது எனவும் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் வழி அவசியமில்லை என தீர்ப்பளித்துள்ளார்.

இத்தீர்ப்பின் அடிப்படையில் டிஆர்பி முடிவெடுத்து தற்போதைய முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தமிழ் வழி இடஒதுக்கீட்டிற்கு    முதுகலை பட்டத்தையும் பி.எட் பட்டத்தையும் தமிழ் வழியில் படித்திருந்தால்  போதுமானது என தெரிவித்துள்ளது. இதன்மூலம்  கடந்த ஓராண்டாக முதுகலை ஆசிரியர் நியமனத்தில் நிலவிவந்த தமிழ்வழி கல்வி பயின்றோர் நியமனத்தில் இருந்த குழப்பம்  முடிவுக்கு வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக