வியாழன், 21 மே, 2015

பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் :499 மார்க்குகள் பெற்று 41 மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்

பத்தாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் இன்று காலைவெளியிடப்பட்டது. தேர்வுத்துறை
இயக்குனர் தேவராஜன் ரிசல்ட்டைவெளியிட்டார். இதில் 499 மார்க்குகள்
பெற்று 41 மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். 192 பேர் முதலிடமும்,
540 பேர் 3 ம் இடத்தை பிடித்து சாதனைபடைத்துள்ளனர். கரூர் , தஞ்சை , அரியலூர், சென்னை, நாமக்கல், ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவிகள் பலர்முதலிடத்தை பிடித்து இடம் சாதனை படைத்துள்ளனர்.முதலிடம் என்பது ஒருவர் அல்லது இருவர் என பிடித்து
வந்த காலம் மாறி பலர் இந்த இடத்தை பிடிக்கும் சூழலை மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ளனர்.
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று
வெளியிடப்பட்டன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதி துவங்கி, ஏப்ரல் 10ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை11,827 பள்ளிகளைச் சேர்ந்த 10.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். 5.40 லட்சம் மாணவர்கள், 5.32 லட்சம்மாணவிகள் எழுதிய இத்தேர்வு 3298 மையங்களில் நடைபெற்றது. இவர்கள் தவிர சென்னை, கோவை மற்றும்நெல்லை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 241 கைதிகளும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர்.
. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்தியில், பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
www.tnresults.nic.in www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு
முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மதிப்பெண் மறுகூட்டலுக்கு மே 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மறுகூட்டல் செய்வதற்கு தலா ரூ.205 முதல் ரூ.305 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே 29 ம் தேதிமுதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகிக்கப்பட உள்ளன. தேர்வில் தோல்வியடையும்மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் மாதம் 26ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை நடைபெறஉள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக