வெள்ளி, 22 மே, 2015

ஆணறியாப் பெண் மொழி! :வார்த்தைகளுக்கிடையில் அர்த்தம் கண்டுபிடிப்பதிலும் பெண்கள் சமர்த்தர்கள்




 
  • வார்த்தைகளுக்கிடையில் அர்த்தம் கண்டுபிடிப்பதிலும் பெண்கள் சமர்த்தர்கள்.. ""நான் ரொம்பக் குண்டாயிட்டேனா?' என்று மனைவி கேட்டால் உடனே கணவன், "இல்லை, இப்பத் தான் நீ அழகா இருக்க" என்று சொல்லிவிட்டால் பிரச்சினை இல்லை. அதைக் கொஞ்சம் நிறுத்தி யோசித்து சொன்னாலும் பிரச்சினை தான். "அதை ஏன் யோசிச்சு சொல்றீங்க" என்பாள். ·

  • Selvam · RAmani  Up Votedநல்ல கட்டுரை பேராசிரியர் அவர்களே. ஒரு ஆணாக இதில் உள்ள சில கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நிறைய விஷயங்களை மறுக்கிறேன். உதாரணத்துக்கு சில: "அவர்களுக்கு உறவுகளும் நட்புகளும் தாங்கல்களும் முக்கியமானவை. உறவுகளின் நெருக்கத்தைப் பராமரிக்கவே பெண்கள் முயல்வார்கள்." இது முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது. பெண்களுக்கு கணவன் வீட்டாரும் உறவுகள்தான் என்று தெரிவதில்லையே. இந்த கருத்து ஒரு சில பெண்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். பெரும்பாலான பெண்களுக்குப் பொருந்தாது என்பதே என் தாழ்மையான கருத்து. '"அய்யோ! அவரைக் கேட்காமல் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட மாட்டேன்!" என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கிறாள். ' இது 50 வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இன்று 'என்னைக் கேட்காமல் இதை ஏன் செய்தீர்கள்' என்று மட்டும் தான் பெண்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த கருத்து முற்றிலும் தவறு. "பெண்களுக்கு மற்றவர்களுடன் பேசப் பிடிக்கும். ..." இது ஓரளவு உண்மைதான் என்றாலும் சின்ன சின்ன விஷயத்துக்கூட மாசக் கணக்கில் கணவனிடம் பேசாமல் இருப்பவர்கள் பெண்கள் தானே.பெண்களுக்கு மற்றவர்களுடன் பேசப் பிடிக்கும். ..." அவள் தம்பி வீட்டில் ஒரு நிகழ்ச்சி. அது பற்றி எனக்குத் தெரியாததால் நான் போகவில்லை. அவளுக்கு மட்டும் அழைப்பு வந்தது. அதற்கு அவள் சென்றாள். அந்த நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை யென்று கோவித்துக்கொண்டு கடந்த 3 மாதங்களாக என்னோடு பேசாமல் இருக்கிறாள். அது எனக்கும் கொஞ்சம் அமைதியான சூழ்நிலையைத்தான் கொடுக்கிறது. இருந்தாலும் 'எப்போதும் பேச விரும்புவாள். உறவுகளை தாங்குவாள்' என்பதெல்லாம் இந்த காலத்து பெண்களுக்குப்  பொருந்தாது. இதுவே அந்த காலத்து பெண்ணாக இருந்திருந்தால் என் கணவரை அழைக்காத நிகழ்ச்சிக்கு நான் கலந்துக்கொள்ள மாட்டேன் என்று தம்பியிடம் சண்டை போட்டிருப்பாள். காலம் ரொம்பவே மாறி விட்டது பேராசிரியர் அவர்களே
  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக