வருமான வரி செலுத்தும், மாத சம்பளதாரர்களுக்கு, வீட்டு வாடகைக்கான,வீட்டு உரிமையாளர்களின், "பான்' எண் மூலம், புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அந்த எண்ணை தெரிவிக்க, உரிமையாளர்கள் மறுக்கின்றனர். நடப்பு, 2013 - 14ம் நிதியாண்டிற்கான வருமான வரி விவரங்களை, மார்ச், 31ம் தேதிக்குள்,
வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மாத சம்பளம் பெறுபவர்கள், வாடகை வீட்டில் குடியிருந்தால், மாதம்தோறும் செலுத்தும் வாடகைக்கான ரசீதை, வருமான வரி தாக்கல் செய்யும் போது, நகல்எடுத்து, கொடுத்தால் போதும்.
கடந்த ஆண்டு, வருமான வரித்துறை பிறப்பித்த, புதிய உத்தரவின் படி,ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு மேல், வீட்டு வாடகை செலுத்துபவர்கள், வீட்டு உரிமையாளரின், "பான்'எண்ணை, ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு குறைவாக, வீட்டு வாடகை செலுத்துபவர்கள், வாடகை ரசீதுடன், "வாடகைதாரர், தன் வீட்டில் தான் வசிக்கிறார்; அவரிடம், இவ்வளவு தொகை, மாத வாடகையாக வசூலிக்கப்படுகிறது' என, உரிமையாளர் அளிக்கும் சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு, கடந்த ஆண்டு புதிய உத்தரவு பிறப்பித்தது.
இதனால், வாடகைதாரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான, வீட்டு உரிமையாளர்கள், தங்களின், "பான்'எண்ணைத் தருவதில்லை; உறுதிமொழி சான்றிதழையும், வழங்குவதில்லை. இதனால், சம்பளதாரர்களுக்கு,வருமான வரி விலக்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது."முன்பிருந்ததுபோன்ற நிலை தொடர வேண்டும்' என, வருமான வரி செலுத்தும், மாத வாடகைதாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக