வெள்ளி, 17 ஜனவரி, 2014

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் சிறப்புப் பயிற்சி


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வரும் 20-ஆம் தேதி முதல் சிறப்புப்
பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனமுதல்வர் எஸ்.ஜெயராமன் கூறியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல்ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சமூக அறிவியலில் வரும் புவியியல் பாடத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படஉள்ளது. 2 பிரிவுகளாக நடைபெறும் இப்பயிற்சி வகுப்பு ஒவ்வொரு பிரிவுக்கு 2நாள்கள் நடைபெறும். வரும் ஜனவரி 20, 21 மற்றும் ஜனவரி 22, 23 ஆகிய நாள்களில் ஒன்றியங்கள்அளவில் பயிற்சி வகுப்பு நடைபெறும். அதன்படி வரும் ஜனவரி 20, 21-ஆம் தேதிகளில் கலியாம்பூண்டியில் உள்ள
மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மையத்தில் உத்தரமேரூர் ஒன்றியப்
பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்குப்
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 இதேபோல் குறிப்பிட்ட அதே தேதிகளில் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத்ஒன்றியப் பகுதி ஆசிரியர்களுக்கு 
ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள்மேல்நிலைப் பள்ளியிலும், காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் ஒன்றியப்பகுதி ஆசிரியர்களுக்கு
 செங்கல்பட்டு செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியிலும்,
 மதுராந்தகம், லத்தூர் ஒன்றியப்பகுதி ஆசிரியர்களுக்கு மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,
 புனித தோமையர் மலை (கிராமம்)பகுதி ஆசிரியர்களுக்கு பல்லாவரம் மறைமலை அடிகளார் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
ஜனவரி 22, 23-ஆம் தேதிகளில் கலியாம்பூண்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மையத்தில் காஞ்சிபுரம் ஒன்றியப்பகுதி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
குன்றத்தூர் ஒன்றியப் பகுதி ஆசிரியர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,
 திருக்கழுகுன்றம், சித்தாமூர் ஒன்றியப் பகுதி ஆசிரியர்களுக்கு செங்கல்பட்டு செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியிலும்,
 அச்சிறுப்பாக்கம் ஒன்றியப்பகுதி ஆசிரியர்களுக்கு மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 
புனித தோமையர் மலை (நகரம்) பகுதி ஆசிரியர்களுக்கு பல்லாவரம் மறைமலை அடிகளார் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 மேற்கண்ட தேதிகளில் சம்மந்தப்பட்ட பகுதி ஆசிரியர்கள் கலந்து கொள்ள இயலாத  பட்சத்தில் ஜனவரி 27, 28-ஆம் தேதிகளில் கலியாம்பூண்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயற்சி மைய முதல்வர் ஜெயராமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக