வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

251 ரூபாய்க்கு மொபைல் எப்படி சாத்தியம்? :ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா.

251 ரூபாய்க்கு எப்படி சாத்தியம்? :ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா கூறியதாவது:
இந்த மொபைல் போனின் தயாரிப்பு செலவு, 2,500 ரூபாய். ஆனால், விற்பனையில் புதுமை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வரி சலுகை போன்ற பல்வேறு காரணங்களால், இந்த போனை, 251 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், மொபைல்
போன் உதிரி பாகங்களுக்கு, 13.8 சதவீதம், வரி சலுகை கிடைக்கிறது. அதாவது, ஒரு மொபைல் போனுக்கு, 470 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது. மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, ஒரு மொபைலுக்கு, 530 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். நேரடி விற்பனையில்லாமல், 'ஆன்லைன்' மூலமாக விற்பதால், 460 ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு, பல்வேறு வகையில் சேமிக்கப்படும் தொகையை, வாடிக்கையாளருக்கே தருகிறோம். வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு பின், 800 ரூபாய்க்கு இந்த போனை விற்க வேண்டும்; ஆனால், 251 ரூபாய்க்கு விற்கிறோம். மிகக் குறைந்த விலையில் விற்பதால், சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிப்போம். சந்தையில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும்போது, பல்வேறு பொருட்களை நாங்கள் விற்க முடியும்; அந்த வகையில், இந்த இழப்பை ஈடுகட்ட முடியும். எங்கள் நிறுவனத்தை, 'ஆன்லைன் ஷாப்பிங் மாலாக' மாற்ற திட்டமிட்டுள்ளோம். அனைத்து பொருட்களும் எங்களிடம் கிடைக்கும். நாங்கள் மிகப் பெரிய லாபத்தை எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.