செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

முதல்வர் ஜெயலலிதா பாணியில்,'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம்,கல்வித் துறை செயலர் சபிதாஅடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

முதல்வர் ஜெயலலிதா பாணியில்,'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களிடம்,கல்வித் துறை செயலர் சபிதாஅடிக்கடி ஆலோசனை நடத்துவதால், கல்வித்துறை பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

புதிய கட்டடம், பாலம் திறப்பு என, பெரும்பாலானநிகழ்ச்சிகளை, முதல்வர் ஜெயலலிதா, வீடியோகான்பரன்சில் நடத்துகிறார். போக்குவரத்துநெரிசல், ஆடம்பரம் தவிர்க்க, எளிமையாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், களத்தில் இறங்கி,உண்மை நிலையை தெரிந்து செயல்பட வேண்டிய அதிகாரிகள், வீடியோ கான்பரன்ஸ் முறையில் அடிக்கடிகூட்டம் நடத்துவதால், கல்வித் துறையில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, வீடியோ கான்பரன்ஸ் முறையில் நேற்று, மாவட்ட சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன்,அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்குனர் அறிவொளி உள்ளிட்டஉயரதிகாரிகள் பங்கேற்றனர். அடிக்கடி இது போன்ற கூட்டங்கள் நடத்துவதால், அன்றாட பணிகள்பாதிக்கப்படுவதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம் கூறியதாவது:அடிக்கடி, 'மீட்டிங்' நடக்கிறது. அதிகாரிகள்பெரும்பாலும், தலைமைச் செயலகத்தில், செயலர் நடத்தும் கூட்டங்களில் தான் இருக்கின்றனர்; கோப்புகளைபார்க்க நேரம் இல்லை. கூட்டம் முடித்து மாலையில் வருகின்றனர்; இரவு உட்கார்ந்து, 'பைல்' பார்க்கவேண்டியுள்ளது. அதனால், முக்கியமான பைல்களை, உரிய நேரத்தில் பார்க்க முடிவதில்லை. எல்லாவற்றுக்கும்,செயலக உத்தரவையே எதிர்பார்க்க வேண்டியுள்ளது. மீட்டிங் என, அதிகாரிகள் சென்று விடுவதால், இயக்குனர்அலுவலகங்களில் எந்த வேலையும் நடப்பதில்லை. வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர், அதிகாரிகளை பார்க்க முடிவதில்லை. செயலகம் சென்றால், அங்கிருந்து இயக்குனர் அலுவலகத்துக்கு திருப்பிஅனுப்புகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், கல்விப் பணிகளில் பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்போடுநிற்பதும், பெயரளவில் அமல்படுத்துவதுமே தொடர் கதையாக இருக்கும். இயக்குனர் அலுவலகங்களையும்,செயலகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

News :dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக