ஞாயிறு, 24 நவம்பர், 2013

பள்ளிகளை இழுத்து மூடிய நிர்வாகம்: பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்

செட்டிநாடு கல்வி நிறுவனம், சென்னை பல்வேறு இடங்களில் 36 மழலையர் பள்ளிக்கூடங்களை தொடங்கியது. இந்த பள்ளிகளில் பிரிகேஜி முதல் 4–ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 4–ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு அரசிடம் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி சில பள்ளிகளை இழுத்து மூடி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகம் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்கள். இதன்பின்னர், சென்னை, அண்ணாசாலையில் உள்ள கல்வி நிறுவன அலுவலகத்தில் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெற்றோர்கள் நேற்று அங்கு சென்றபோது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் மறுத்தது. இதையடுத்து கல்வி நிர்வாக அலுவலக வளாகத்துக்குள் பெற்றோரை அனுமதிக்க போலீசார் மறுத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தை நடத்தினர். இதன்பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக