செவ்வாய், 26 நவம்பர், 2013

விடை தேடுவோம்.....

ஒவ்வொரு கேள்விக்குமான சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள். சில கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் இருக்கலாம். சில கேள்விகளுக்கு எந்த பதிலும் சரியானதாக இல்லாமலும் போகலாம். எனவே, கவனமாக பதில் அளியுங்கள்:
1. மகாபாரத சகுனி காந்தார நாட்டைச் சேர்ந்தவர் என்பார்கள். அந்த காந்தாரம் இப்போது எங்கே உள்ளது?
) பிகார் மாநிலம்
) ஆப்கானிஸ்தான்
) ஒடிசாவின் அருகில்
2. எம்.ஆர். ராதா எனும் பெயரில் உள்ளஎம்எதைக் குறிக்கிறது?
) முள்ளிவாய்க்கால்
) மைசூர்
) மெட்ராஸ்
3. விம்பிள்டன் போட்டிகள் எனும் பெயரில் உள்ள விம்பிள்டன் எதைக் குறிக்கிறது?
) ஒரு பிரபல டென்னிஸ் ராக்கெட்டின் பெயர்
) ஒரு இடத்தின் பெயர்
) டென்னிஸ் கோப்பையை வழங்கும் ராஜவம்சத்தினர் தங்கும் இடம்.
4. லாக்ரிமல் சுரப்பி அதிகம் வேலை செய்தால் என்னவாகும்?
) உடல் பருமனாகும்
) அழுவோம்
) மிகுந்த பதற்றம் ஏற்படும்
5. வெள்ளைப் பூண்டின் தாவரவியல் பெயர் என்ன?
) அலியம் சடைவம்
) அலியம் சீபா
) அராகிஸ் ஹைபோகியா
6. டைகோனாட் (Tyconaut) என்றால் என்ன?
) அதிக கலோரி கொண்ட முந்திரி வகை.
) பிறர் எது பேசினாலும் அதில் தவறு கண்டுபிடிக்கும் தன்மை.
) விண்வெளி வீரர்
7. சிவாஜி கணேசன் எந்த கதாபாத்திரத்தை ஒரு முழு நீளப் படத்தில் ஏற்று நடித்ததில்லை?
) மன்னன் சிவாஜி
) குறுநில மன்னன் கட்டப்பொம்மன்
) ..சிதம்பரம் பிள்ளை
விடைகள்:
விரைவில்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக