திங்கள், 19 அக்டோபர், 2015

துவரம் பருப்பு ரூ.110க்கு வாணிப நுகர்பொருள் கழகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்-தமிழக முதல்வர்

தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு கிலோ ரூ.30க்கு
தொடர்ந்து விற்பனை செய்யப்படும். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு 500 மெட்ரிக் டன்
துவரை பெறப்பட்டுள்ளது. இவை ஆலைகள் மூலம் பருப்பாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படும்.
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட துவரம் பருப்பு ரூ.110க்கு விற்பனை செய்யப்படும். அரை
கிலோ பாக்கெட் ரூ.55க்கு விற்பனை செய்யப்படும். இவை வாணிப நுகர்பொருள் கழகங்கள்
மூலம் விற்பனை செய்யப்படும். சென்னை, மதுரை உள்ளிட்ட 91 அங்காடிகளில் விற்பனை செய்யப்படும். ரேஷன் கடைகளில் பாமாயில் ரூ.25க்கு தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.