வெள்ளி, 30 அக்டோபர், 2015

SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் சம்பளம் பெறுவதற்கானநிதி ஒப்புதல். ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறைச் செயலர் கடிதம் வெளியீடு

SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் சம்பளம் பெறுவதற்கானநிதி ஒப்புதல். ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறைச் செயலர் கடிதம் வெளியீடு

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்விதிட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.அதேபோல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில்(எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு எண்: 175ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த ஜூனிற்கு முன், ஒவ்வொரு ஐந்தாண்டு அல்லது ஆண்டு தோறும் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதற்கானநிதி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், ஜூனிற்கு பின் ஒவ்வொரு மாதமும் நிதித்துறைசார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்தான், சம்பளம் வழங்கப்படுகிறது.இதனால் ஆறு மாதங்களாக தாமதமாக சம்பளம் பெறுகின்றனர். ,அக்டோபர் சம்பளம் பெறுவதற்கானநிதி ஒப்புதல் வழங்கப்பட்டது ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்