வெள்ளி, 16 அக்டோபர், 2015

குரூப் 2 (ஏ) போட்டித் தேர்வுக்கு பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி வரும் 24-ம் தேதி இலவச வழிகாட்டும் பயிற்சி!தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2 (ஏ) போட்டித் தேர்வுக்கு பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி வரும் 24-ம் தேதி இலவச வழிகாட்டும் பயிற்சி அளிக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 (ஏ) பிரிவில் 1,863 பணியிடங்களுக்கு வரும் டிசம்பர் 27-ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அக்டோபர் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு இலவச வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

அனுபவமுள்ள பேராசிரியர்கள் தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்குவார்கள் என பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி, பெரியார் திடல், 84/1 ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600007 என்ற முகவரியை தொடர்புகொள்ளலாம்.