சனி, 3 அக்டோபர், 2015

FLASH NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

FLASH NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது முதுகலை ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன எனத்தெரியவருகின்றது. அவை நிரப்பப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவர்.
2015-16 ஆம் கால்வியாண்டு கூடுதலாக மேனிலை வகுப்புகளில் சேர்க்கை நடைபெற்றுள்ளதால் அதற்கேற்ப பள்ளிகளுக்கு கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டுகிறேன்.
வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் முதுகலை ஆசிரியர் பட்டம் பெற்றவர்களும் பயனடையும் வகையில் போட்டித் தேர்வு மூலம் 2015-16 ஆம் கால்வியாண்டு காலிப்பணியிட அடிப்படையில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பணிந்து வேண்டப்படுகின்றது.
அதற்கான நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் எனவும் எவ்வளவு பணியிடங்கள் 2015-16 ஆம் கால்வியாண்டு நிரப்பப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன எனவும் தெரிவிக்க பணிந்து வேண்டப்படுகின்றது எனும் கோரிக்கைக்கு கிழ்கண்டவாறு பள்ளிக்கல்வி இயக்குனர் பதிலளித்துள்ளார்

பள்ளிக்கல்வி இயக்குனரின் பதில்:
2015-16 ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப வருங்காலங்களில் அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.069121/டபிள்யு2/2015 நாள் 29.09.2015