புதன், 19 பிப்ரவரி, 2014

தாட்கோ திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்

பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மூலம் தாட்கோ திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு வாடகை வாகனங்கள் வாங்கவும், விவசாயிகள் மானிய விலையில்பம்பு செட்டுகள் வாங்கவும், கோடநாடு பகுதியில் 200 வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டவும், பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் கடன் உதவிகளை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 42 பழங்குடியின மக்களுக்கு 50 சதவிகித மானியத்தில் வாடகை வாகனங்கள் வாங்கிட 2 கோடியே 75 லட்சம் ரூபாய்; நீலகிரி மாவட்டம், கோடநாடு பகுதி பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 7 பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய்; நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 150 விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்ல் பம்புசெட்டுகள் வாங்கிட 45 லட்சம் ரூபாய்; தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 மூலம் நீலகிரி மாவட்டம், கோடநாடு பகுதிகளில் உள்ள 200 வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டுவதற்கு 40 லட்சம் ரூபாய்; என மொத்தம், 3கோடியே 80 லட்சம் ரூபாய்க்கான கடன் உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கடனுதவிகளை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக