வெள்ளி, 23 மே, 2014

காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ்.மூலமாகவும் அறிந்துகொள்ளலாம். அதேபோல், தாங்கள் பயின்றபள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம்தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம்மாணவர்களும், தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,ww.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதளங்களில்
அறிந்துகொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளைப் பெற பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின்
53576 என்ற எண்ணுக்கு SSLC என டைப் செய்து தங்களது பதிவு எண்ணையும்
மாணவர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். அதேபோல், 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD என டைப் செய்து மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும்
எஸ்.எம்.எஸ். அனுப்பி தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்கள்,அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளைத்தெரிந்துகொள்ளலாம்.

தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: தனித்தேர்வர்கள்
தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் வெள்ளிக்கிழமை காலை நேரடியாக
மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அன்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், இவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படாது.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக