திங்கள், 19 மே, 2014

தமிழகஅரசுக்கு முழு ஒத்துழைப்பு-நரேந்திர மோடி

புதிதாக மத்தியில் பொறுப்பேற்கும் அரசு, தமிழகஅரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவிடம் உறுதியளித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொலைபேசியில் பேசிய மோடி இதை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றதற்காக பாஜகவின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர
மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ஜெயலலிதா சனிக்கிழமை கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்முதல்வர் ஜெயலலிதாவிடம் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.அவர் பேசும்போது, முதல்வரின்
கடிதத்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அதோடு, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றி பெற்றதற்காகஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளைக் கூறினார். இந்தியாவின் பிரதமராக மோடி வெற்றிகரமாக செயலாற்ற ஜெயலலிதாவும்தனது வாழ்த்துகளைக் கூறினார். அப்போது, புதிதாக பொறுப்பேற்க உள்ள மத்திய அரசுக்கும்,
தமிழகத்துக்கும் இடையே முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் எனஜெயலலிதாவிடம் நரேந்திர மோடி உறுதியளித்ததாக தமிழகஅரசு தெரிவித்துள்ளது.