வெள்ளி, 30 மே, 2014

'பிளஸ் 2 முடிக்காமல், 'டிப்ளமோ' தகுதியுடன் பி.எட்., சேர்ந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை

'பிளஸ் 2 முடிக்காமல், 'டிப்ளமோ' தகுதியுடன் பி.எட்., சேர்ந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
அருப்புக்கோட்டை சங்கரேஸ்வரி தாக்கல் செய்த மனு:நான் பத்தாம் வகுப்பில் 81 சதவீத
மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன். பிளஸ் 2 படிக்காமல், 'டிப்ளமோ' (கம்ப்யூட்டர்
தொழில்நுட்பம்) படித்தேன். பி.எஸ்.சி., தேர்ச்சி பெற்றேன்.விருதுநகர் பி.குமாரலிங்கபுரம்
ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லுாரியில் 2013 ல் பி.எட்., படிப்பில் சேர்ந்தேன். பிப்.,27 ல் செய்முறைத் தேர்வு நடந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர்,' நீங்கள் பிளஸ் 2படிக்கவில்லை. அனுமதிக்க முடியாது,' என்றார். 'பி.எட்., படிக்க எனக்குத் தகுதி இல்லை என இறுதி முடிவு எட்டப்படும் பட்சத்தில், பட்டத்தை திரும்பப்
பெற்றுக்கொள்ளலாம்,' என உறுதியளித்ததன் பேரில்,செய்முறைத் தேர்வுக்கு அனுமதித்தனர்.எழுத்துத் தேர்வு மே 30 ல் துவங்குகிறது. தேர்வுக் கட்டணத்தை,
பல்கலைக்கு செலுத்திவிட்டேன். எனக்கு 'ஹால்டிக்கெட்' வழங்கவில்லை.'டிப்ளமோ' பிளஸ் 2 விற்கு சமமானது;'டிப்ளமோ' படித்திருந்தாலும், பி.எட்.,சேர தகுதி உண்டு என 2012 ல் அரசு உத்தரவிட்டுள்ளது.இதனடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கவும், தேர்வு முடிந்த பின் சான்றிதழ் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்

இதுபோல், செல்லம்மாள் மற்றொரு மனு தாக்கல்செய்தார்.நீதிபதி ஆர்.கருப்பையா முன், விசாரணைகு வந்தது. மனுதாரர்களின் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான்
ஆஜரானார்.நீதிபதி: மனுதாரர்களுக்கு 'ஹால்டிக்கெட்' வழங்கி, தேர்வு எழுத பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர்அனுமதிக்க வேண்டும். மற்றவை, இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து அமையும். விசாரணை ஜூன் 10க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.