ஞாயிறு, 25 மே, 2014

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை 6 பேர் பிடித்தனர்

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை மாணவ,
மாணவிகள் 6 பேர் பிடித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 204 அரசுப்பள்ளிகள், 6 உதவி பெறும் பள்ளிகள், 18 சுயநிதி பள்ளிகள், 57 மெட்ரிக்பள்ளிகள் என 285 பள்ளிகளில் இருந்து 13,493 மாணவர்கள், 11,796 மாணவிகள்என 25,289 பேர் எழுதினர். இதில் 12,296 மாணவர்கள் 10,885 மாணவிகள்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவற்றில் அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வெழுதியவர்களில்
நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.ராகுல் 494 மதிப்பெண்கள்பெற்று முதலிடம் பிடித்தார்.

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.புவனேஸ்வரி, கே.ஜான்சிராணி இருவரும் 493மதிப்பெண்களும், பென்னாகரம் அருகே புதுபாலசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கே.லோகேஷ் 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம்பெற்றனர்.

ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.சரத், காரிமங்கலம்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.கே.பிரதீப் ஆகியோர் தலா 492
மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.

அரசுப் பள்ளிகளில் 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம்பெற்ற மாணவர் எஸ்.ராகுலின் தாய் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். ராகுல் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-99, ஆங்கிலம்-96,கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99. எதிர்காலத்தில் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம்
என்று தெரிவித்தார்.

493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்த எம்,புவனேஸ்வரியின் தந்தை மாதேஸ்வரன் டீ கடை நடத்தி வருகிறார். தாய் தெய்வானை. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-97, ஆங்கிலம்-98, கணிதம்-98, அறிவியல்-100, சமூக அறிவியல்-100. எதிர்காலத்தில் ஆட்சியராவதே லட்சியம்என அவர் தெரிவித்தார்.

493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற கே.ஜான்சிராணியின் தந்தை கே.குமார் விவசாயி. தாய் சித்ரா. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-96,அறிவியல்-100, சமூக அறிவியல்-100.எதிர்காலத்தில் மருத்துவராக விருப்பம்
தெரிவித்தார்.

493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற கே.லோகேஷின்தந்தை குமரேசன் மெக்கானிக். தாய் லட்சுமி. இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-97, ஆங்கிலம்-96, கணிதம்-100,அறிவியல்-100, சமூக அறிவியல்-100. மருத்துவராவதே லட்சியம்
என்று தெரிவித்தார்.

492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்த எம்.சரத்தின் தந்தை முருகேசன் பெயின்டராகவும், தாய் மல்லிகா ஆசிரியையாகவும்
உள்ளனர். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்-94, கணிதம்-100,அறிவியல்-100, சமூக அறிவியல்-100. வருங்காலத்தில் மருத்துவராக
விரும்புவதாக தெரிவித்தார்.

492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்த மாணவர் கே.கே.பிரதீப்பின் தந்தை கிருஷ்ணன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாய் மாது. எதிர்காலத்தில் வானவியல் ஆராய்ச்சியாளராக விரும்புவதாக பிரதீப்தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக