திங்கள், 19 மே, 2014

தமிழக அமைச்சரவையிலிருந்து 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர்

தமிழக அமைச்சரவையிலிருந்து 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையிலிருந்து ரமணா, பச்சைமால், தாமோதரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதில் வேலுமணி, கோகுல இந்திரா மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்
சேர்க்கப்பட்டுள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும்துணிநூல்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும்உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த முனுசாமிக்கு தொழிலாளர் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலத்துறையை கவனித்த ஆர்.பி., உதயகுமாருக்கு வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறித்துறை அமைச்சராக இருந்த சுந்தர்ராஜூக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.