வியாழன், 22 மே, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு இன்னும் 2 வாரத்தில் இணையதளத்தில் சரியான விடை வெளியிடப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு இன்னும் 2 வாரத்தில் இணையதளத்தில் சரியான விடை வெளியிடப்படும்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று நடத்தப்பட்டது. இன்னும் 2 வாரத்தில் சரியான விடையை இணையதளத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு
இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டுமானால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதன் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. காது கேளாதவர்கள், பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த நிலையில் பி.எட். படித்த பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று தமிழ்நாடு ழுமுவதும் நடத்தப்பட்டது. 39 மையங்களில் நடந்த தேர்வை 4 ஆயிரத்து 694 பேர் எழுதினார்கள். 218 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சென்னையில் அசோக்நகர் அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்.கே.டி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி உள்பட 6 இடங்களில் தேர்வு நடந்தது.
எளிதாக இருந்தது
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த பட்டதாரிகள் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த பி.செல்வி, தருமபுரியைச்சேர்ந்த அறிவொளி, ஒகேனக்கல்லைச் சேர்ந்த எம்.சக்திவேல் ஆகியோர் கூறுகையில் தேர்வு எளிதாக இருந்தது என்றனர். சிலர் கூறுகையில் தமிழில் சில கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என்றனர். பார்வையற்ற மாணவர்கள் சிலர் தெரிவிக்கையில் சமூக அறிவியல் பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில் 4 வகையான கோடுகள் கொடுக்கப்பட்டு அவற்றிற்கு எதிராக சர்வதேச எல்லை கோடு குறியீடு, கிணறுக்கான குறியீடு உள்ளிட்ட 4 குறியீடுகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த கோடுகளை சம்பந்தப்பட்ட குறியீடுகளுடன் இணைக்கவேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. பார்வையற்ற எங்களுக்கு அந்த கோடு எப்படி தெரிந்து படித்திருக்க முடியும். எங்களிடம் இப்படிப்பட்ட கேள்வி கேட்டிருக்கக்கூடாது என்றனர்.
2 வாரத்தில் விடைவெளியிடப்படும்

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 6-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை பாடம் நடத்த போகும் இவர்களுக்கு இந்த சர்வதேச குறியீடு தெரிந்திருக்கவேண்டும். அவர்களுக்கே தெரியவில்லை என்றால் எப்படி பாடம் நடத்துவார்கள்.இன்னும் 2 வாரத்தில் இந்த தேர்வுக்கான வினா- விடை (கீ- ஆன்சர்) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக