திங்கள், 19 மே, 2014

கிராம நிர்வாக அலுவலர்கள் மனக்குமுறல்...

கிராம நிர்வாக அலுவலர்கள் மனக்குமுறல்...
கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு குரல்
கொடுப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காததால் மிகுந்த மனக்குமுறல் அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம
உதவியாளர்களுக்கு உடனடி ஊதியம் வழங்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்து விழுப்புரத்திலஆர்ப்பாட்டம் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர், அரசின் அலட்சியப் போக்கினால், அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ந்து 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்குக்கூட அரசு பதவி உயர்வு வழங்க முன் வராததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
எட்டாக்கனி
தமிழகத்தில், கடந்த 1982, 1984 ஆகிய ஆண்டுகளில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணிக்கு வந்தவர்கள்பலரும், இன்றளவும் பதவி உயர்வு கிடைக்காமல் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர்பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்திருந்தும், துறை வாரியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தும், இன்றுவரை பதவி உயர்வு எட்டாக் கனியாகவே உள்ளது.
காவல்துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படுவதைப்போல், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை சிறப்பு வருவாய் ஆய்வாளராகவும், 20 ஆண்டுகளபணி முடித்தவர்களை சிறப்புத் துணை தாசில்தாராகவும், 30 ஆண்டுகள்பணி முடித்தவர்களை சிறப்பு தாசில்தாராகவும் பதவி உயர்வு அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.
குறைந்த ஒதுக்கீடு
இளநிலை உதவியாளர் அந்தஸ்தில் வருவாய்த்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்
வி.ஏ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில், மாவட்ட அளவில் உருவாகும் உதவியாளர் பணியிடங்களில் 10சதவீதம் மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. வருவாய்துறையில் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர் ஆகிய மூன்று பணியாளர் தொகுதியின் எண்ணிக்கையைவிட, பல மடங்கு அதிகமானஎண்ணிக்கையில் உள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கு 10 சதவீத பதவி உயர்வு ஒதுக்கப்பட்டுள்ளது, அவர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பள பிடித்தம்
கடந்த தி.மு.க., ஆட்சியின்போது 2011ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழ்நாடு கிராமநிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர சங்கம் ஆகிய கூட்டமைப்பின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்ட காலத்தை வரன்முறைப்படுத்தி, ஊதியம் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பாரபட்ச நடவடிக்கை
ஆறாவது ஊதியக்குழுவில் குறித்த பயணப்படி(எப்.டி.ஏ.,) அனைத்து அரசு ஊழியர்களுக்கும்,
இரட்டிப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அ<லுவலர்களுக்கு மட்டும், இரட்டிப்பாக்கப் படவில்லை.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு, 5
மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து கூடுதல் பொறுப்பு வகிக்கின்ற காலம் வரையில் , ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக ஊதியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளநிலுவையில் உள்ளது.
பொருந்தாத உத்தரவு
கடந்த 25.8.2009 அன்று, அரசுப் பணியில் வரையறுக்கப்படாத பணிக்காலத்தில் பாதியை, முறையான பணிக்காலத்துடன் சேர்த்து ஓய்வூதியத்திற்கு எடுத்துக் கொள்வது என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்தஅரசு உத்தரவு, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொருந்தாது என மறுக்கப் பட்டு வருகிறது. இதேபோல் கடந்த 2009ம் ஆண்டு அரசால் நியமிக்கப்பட்ட வி.ஏ.ஓ.,க்கள், கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் தற்காலிக வி.ஏ.ஓ.,க்களுக்கு பணி வரன்முறை செய்வது நீண்ட கால தாமதமாகி வருகிறது.
மனக் குமுறல்
மாநில அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம், நேரிடையாக கொண்டு சேர்க்கக் கூடிய தங்களின்கோரிக்கைகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், வி.ஏ.ஓ.,க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் மிகப்பெரிய அளவில்கடந்த பிப்ரவரி 9ம் தேதி சென்னையில் கோரிக்கை விளக்கப் பேரணி நடத்தினர். இதில், தமிழகம் முழுவதிலும்
இருந்து 7,500 வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் 17 ஆயிரம் கிராம உதவியாளர்கள் உட்பட 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
பேரணி முடிவில், தலைமை செயலகத்தில் அரசு உயர்அதிகாரிகளை சந்தித்து, 21 அம்ச கோரிக்கைகளஅடங்கிய மனுவை அளித்தனர். இதன் பிறகும், அரசு தரப்பில் அதிகாரிகள் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த முன் வராததால், வி.ஏ. ஓ.,க்கள் சங்கத்தினர், மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அனுமதி மறுப்பு தமிழக லோக்சபா தேர்தலில் ஓட்டுச் சாவடி பணியாற்றிய வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப் படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தால்தான், தங்களுக்கு தேர்தல்
பணி ஊதியம் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம்சாட்டினர்.
இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் வட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகஅறிவித்திருந்தனர். இதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 12ம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.
மாவட்ட தலைநகரான விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணமகாட்டி, போலீஸ் அனுமதி மறுக்கப் பட்டது. மேலும், தாசில் தார் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள்வலியுறுத்தியதால், வி.வி.ஏ.,க்கள் கண்டன ஆர்ப்பாட்டம், விழுப்புரத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
தங்களது அடிப்படை உரிமைகளுக்கு கூட குரல் கொடுக்க மாவட்ட நிர்வாகம்
அனுமதி மறுப்பதை எண்ணி வி.ஏ. ஓ.,க்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். தங்களது கோரிக்கைள் குறித்து அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது தொடர்ந்தால், போராட்டத்தை தீவிரப் படுத்துவது என, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக