திங்கள், 19 மே, 2014

நாடாளுமன்றக் குழு தலைவராக எம். தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார்

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்நாடாளுமன்றக் குழு தலைவராக எம். தம்பிதுரையும், துணைத் தலைவராகவி.மைத்ரேயன், ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
மேலும் அதிமுக நாடாளுமன்ற மக்களவை குழு நிர்வாகிகள்: தலைவர்: எம்.தம்பிதுரை, துணைத் தலைவர்: பி.வேணுகோபால், கொறடா: பி.குமார்,
பொருளாளர்: கே.என். ராமச்சந்திரன், செயலாளர்: ஆர்.வனரோஜா,
அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு நிர்வாகிகள்: தலைவர்: வி.மைத்ரேயன்,துணைத் தலைவர்: எஸ். முத்துக்கருப்பன், கொறடா: எல்.சசிகலா புஷ்பா பொருளாளர்: ஆர். லட்சுமணன். செயலாளர்: டி.ரத்தினவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.