வெள்ளி, 30 மே, 2014

பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 10 கட்டளைகள்

குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்'என்பது உட்பட, 10 கட்டளைகளை, மத்தியஅமைச்சர்களுக்கு மோடி பிறப்பித்து உள்ளார்.அத்துடன், 'ஒவ்வொரு மத்திய அமைச்சரும், 100நாள் செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும்' என்றும் உத்தரவிட்டு உள்ளார்.

மத்திய அமைச்சரவையின், இரண்டாவது கூட்டம்,டில்லியில், பிரதமர் நரேந்திர
மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தகூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் பேசிய,பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர்,வெங்கையா நாயுடு கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றஅமைச்சர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, சில
அறிவுரைகளை வழங்கினார். 100 நாள் செயல்திட்டம் என்ற யோசனையையும்முன்வைத்தார்.
ஒவ்வொரு அமைச்சரும், தன் அமைச்சகத்தின் கீழ்உள்ள துறைகளில், அடுத்து வரும், 100 நாட்களில், என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம்என்பதையும், தேவையான திட்டங்கள் பற்றியும்,தகவல்களை தொகுக்க வேண்டும். அந்தத்திட்டங்களை, 100 நாட்களுக்குள் அமல்படுத்த,முழுஅளவில் தயாராக வேண்டும் என, கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான, குடிநீர், கல்வி மற்றும்மின்சாரத்தை மேம்படுத்துவதே, புதிய அரசின்திட்டம் என்று கூறிய மோடி, வரும் நாட்களில்,
இவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்என்பது உட்பட, 10 கட்டளைகளையும் பிறப்பித்தார்.
1. பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்ற வேண்டும்.
2. மக்களின் முக்கிய தேவைகளை தீர்க்க, அதிகமுன்னுரிமை அளிக்க வேண்டும்.
3. உட்கட்டமைப்பு துறைகளில்,சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும். உலக
நாடுகளின் உற்பத்தி மையமாக, இந்தியா மாறவேண்டும்.
4. நல்ல திறமையானநிர்வாகத்தை அளிக்கவேண்டும். மக்களுக்கு,நன்மை தரும்
திட்டங்களை அமல்படுத்தவேண்டும்.
5. மக்களுக்கான திட்டங்களையும்,கொள்கைகளையும், குறிப்பிட்டகாலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்.
6. கொள்கைகளில் உறுதியாக இருப்பதோடு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும்
காப்பாற்ற வேண்டும்.
7. மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயானஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். கேபினட் அந்தஸ்து உடைய அமைச்சர்கள், தங்களுக்கு கீழ் பணிபுரியும்
இணை அமைச்சர்களை அரவணைத்து,ஒரு குழு போல செயல்பட வேண்டும்.
8. அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்.
9. அரசின் ஏல நடைமுறைகள் அனைத்தும்,வெளிப்படையாக நடைபெற வேண்டும். அதற்கேற்றவகையில், இ டெண்டர் முறையை,அனைத்து துறைகளிலும் அமல்படுத்த வேண்டும்.
10. அதிகாரிகள் திறமையாக செயல்பட,அவர்களுக்கு அதிகாரமும், சுதந்திரமும்
அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, 10கட்டளைகளைப் பிறப்பித்தார்.
மொத்தத்தில், தே.ஜ., கூட்டணி அரசு, மக்கள்
நலன் சார்ந்த அரசாக செயல்பட வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய
அமைச்சகங்களுக்கு தலைமை ஏற்றுள்ள அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகள் என, அனைத்து தரப்பினரும்,ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்பட
வேண்டும். முதலீடுகளை அதிகரிப்பது,நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்திட்டங்களை முடிப்பது, நாட்டின் நலனுக்காக இயற்கை வளங்களை முறையாகப்பயன்படுத்துவது போன்றவற்றை சிறப்பாகசெயல்படுத்த வேண்டும்.ஒவ்வொரு துறை செயலர்களையும்,
அவ்வப்போது சந்திக்கப் போவதாகக்கூறியுள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், விவசாயம்மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு, அரசு, அதிகமுன்னுரிமை அளிக்கும். 'மக்கள் நம்மிடம் நிறையஎதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு தரப்பினரும், ஒவ்வொரு விதமான
கோரிக்கைகளுடன் உள்ளனர். அனைவரின்வேண்டுகோள்களுக்கும் முன்னுரிமை அளிக்க
வேண்டும். உண்மையானகூட்டாட்சி தத்துவத்தை பேணிக்காக்கும்வகையில், மாநிலங்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்' என,பிரதமர் மோடி கூறியுள்ளார். தன்னுடைய இந்தச்செய்தியை, நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத்தெரிவிக்க, லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், பிரதமர்மோடி,தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துவார்.
இவ்வாறு, வெங்கையா நாயுடு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக