புதன், 21 மே, 2014

மே.26ஆம் தேதி நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி

மே.26ஆம் தேதி நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி
பாஜகவின் நாடாளுமன்றக்குழு தலைவராக மோடி ஒருமனதாக கூட்டணி தலைவர்களுடன்.குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு சென்றார். புது தில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை அத்வானி தலைமையிலான தேசிய ஜனநாயக
கூட்டணி தலைவர்கள் சந்தித்தனர், அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர்
பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுளள நரேந்திரமோடி, பிரணாப் முகர்ஜியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார்அப்போது அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை பிரணாப் முகர்ஜியிடம்
ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்த சந்திப்பில் சுஸ்மா சுவராஜ், அருண்ஜெட்லி மற்றும் தேசிய ஜனநாயககூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். இதனிடையே மே.26 ஆம்தேதி பிரதமராக வரும் 26 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.