வியாழன், 22 மே, 2014

சென்னை பல்கலை: தொலைதூர கல்வி நிறுவன தேர்வு மே 28ல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில்இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் மே 28-ஆம் தேதி தொடங்கஉள்ளன. ஜூன் 11-ஆம் தேதி வரை ஞாயிற்றுக் கிழமைகளைத் தவிர மற்றஅனைத்து நாள்களிலும் தேர்வு நடத்தப்படும். தேர்வறை நுழைவுச் சீட்டுகள்தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட மாட்டாது. மாணவர்கள் தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் www.ideunom.ac.inஇணையதளத்திலிருந்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மைய விவரங்கள்ஏற்கெனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என பல்கலைக்கழகசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக