சனி, 17 மே, 2014

மக்கள் ஆதரவு பெற்ற முதன்மை கட்சி அ.தி.மு.க.,:முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்!

அவரது அறிக்கை:தமிழக மக்கள், 37 தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்களை, வெற்றி பெறச் செய்ததன் மூலம், தங்களின் முழுமையான நம்பிக்கையை, என் மீது வைத்திருப்பதை, உலகிற்கு எடுத்துக்-காட்டியுள்ளனர்.அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல், நான் என்றும், தமிழக மக்களின் மேன்மைக்காக-பாடுபடுவேன்.பிரசாரத்தின் போது, 'தமிழக மக்களுக்கு எதிரான, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின்-துரோக செயல்களுக்கு துணைபோன, தி.மு.க.,வை விரட்டி அடிக்க வேண்டும்; தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட, மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும்; என் கரங்களை வலுப்படுத்த வேண்டும்' என, தமிழக மக்களிடம் கோரிக்கை விடுத்தேன்.மக்கள் நலன் குறித்து பேசாமல், தங்கள்
கட்சி வெற்றி பெற்றால், என்ன நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும் என்பதை பற்றி விளக்காமல், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் என் மீதும், என் தலைமையிலான அரசு மீதும்,புழுதிவாரி இறைப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற விமர்சனங்கள், கருத்துக்கள், பொய் பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு,அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்து, எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டி உள்ளனர். ஆலந்துார் இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்துள்ளனர்.தமிழக தேர்தல் வரலாற்றில்இதுவரை எந்த ஒரு தனிக்கட்சியும் பெறாத அளவுக்கு, 37 தொகுதிகளில், அ.தி.மு.க.,வை தமிழக மக்கள் வெற்றி பெறச்
செய்துள்ளனர். இந்த தேர்தல் மூலம், தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்ற, தனிப்பெரும் முதன்மை கட்சி அ.தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ், ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும், சுயநலவாத தி.மு.க., மற்றும் இதர சுயநல உதிரி கட்சிகள், இந்த தேர்தலில் புறக்கணிக்கப்பட்டிருப்பது, ஜனநாயகத்திற்கு கிடைத்த
மாபெரும் வெற்றி.சுயநலவாதிகளை புறந்தள்ளிவிட்டு, பொதுநலத்திற்கு மக்கள் ஓட்டளித்து உள்ளதை, இந்த தேர்தல் எடுத்துக் காட்டுகிறது.என் மீது, இவ்வளவு நம்பிக்கை வைத்து ஓட்டு போட்ட, தமிழக மக்களின் எண்ணங்களை,நிறைவேற்றும் வகையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள, அனைத்து வாக்குறுதிகளையும், புதிதாகஅமைய உள்ள, மத்திய அரசு மூலம் நிறைவேற்றிட, அயராது பாடுபடுவேன். ஓயாது உழைப்பேன்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக