சனி, 17 மே, 2014

நாட்டின் அடுத்தபிரதமராக நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி பதவியேற்கிறார்

நாட்டின் அடுத்தபிரதமராக நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி பதவியேற்கிறார்

பேரலை போல் எழுச்சி பெற்றுள்ள பாஜக, 282இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது
மக்களவைத் தேர்தலில் பேரலை போல் எழுச்சி பெற்றுள்ள பாஜக, 282
இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. நாட்டின் அடுத்த
பிரதமராக நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி பதவியேற்கிறார். பாஜகவிடம்ஆட்சியை இழந்துள்ள காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில்வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளத.
மக்களவைக்கு மொத்தமுள்ள 543 இடங்களுக்கு 9 கட்டங்களாகத் தேர்தல்
நடைபெற்றது. கடைசிக்கட்ட தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது.
அனைத்து கட்டங்களிலும் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (மே 16)
எண்ணப்பட்டன. இதில், காலை முதலே பல்வேறு மாநிலங்களிலும்
பாஜகவே தொடர்ந்து முன்னிலை வகித்தது. அக்கட்சி 282 இடங்களில்
வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1980ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஜக தனது அரசியல் வரலாற்றில்இதுவரை இல்லாத அதிகபட்ச வெற்றியை இம்முறை சாதித்துள்ளது.
இதன்மூலம் மக்களவைக்கு மொத்தமுள்ள 543 இடங்களில் பாதிக்கும்
மேற்பட்ட இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையைச் சாதித்துள்ளது. அதன்
கூட்டணிக் கட்சிகளுக்கு 53 இடங்கள் கிடைத்துள்ளன.

அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாஜக 1998 மற்றும் 1999 மக்களவைத்
தேர்தல்களில் முறையே 182 மற்றும் 183 இடங்களைக் கைப்பற்றியதே அக்கட்சியின் அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது. அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 303இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போதைய மக்களவைத் தேர்தலில்இக்கூட்டணி 325 இடங்களைப் பிடித்துள்ளது.

வெற்றிக்கு வித்திட்ட மாநிலங்கள் : பாஜகவின் இந்த அபார வெற்றிக்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் ஆகியமாநிலங்களில் அக்கட்சி பெற்ற வெற்றிகளே வித்திட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பாஜக 71 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்துக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. அங்கு காங்கிரஸ் 2 இடங்களிலும் (ரே பரேலி, அமேதி), மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜவாதி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.மாயாவதியின் பகுஜன் சமாஜ், மத்திய அமைச்சர் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீ லோக்தளம் ஆகிய கட்சிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 இடங்களில் பாஜக-சிவசேனை கூட்டணி 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 4 இடங்கள் மட்டுமே காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்துள்ளன. மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் 27 இடங்களை பாஜகவென்றுள்ளது. அங்கு காங்கிரஸýக்கு 2 இடங்களே கிடைத்துள்ளன.
இவை தவிர, குஜராத்தில் உள்ள 26 இடங்களையும், ராஜஸ்தானில் உள்ள 25
இடங்களையும் பாஜக கைப்பற்றி, 100 சதவீத வெற்றியை ருசித்துள்ளது.

தாயாரிடம் ஆசி பெற்றார்: ஆமதாபாதில் தனது தாயார் ஹீராபாவைச் சந்தித்தார்.
மோடியின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்த அவர்"எனது ஆசி அவருக்கு உண்டு. அவர் நாட்டை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்துவார்' என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி மற்றும் குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அவர் வாராணசி எம்.பி. பதவியைத் தக்கவைத்துக் கொண்டு, வதோதரா எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வார்என்று கூறப்படுகிறது.
21ஆம் தேதி பதவியேற்கிறார் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக வரும் 21ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா,துணைத் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டதலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் படுதோல்வி
மத்தியில் கடந்த 10ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அக்கட்சி 52 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, கேரள காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.பி. கட்சிகள் தலா 1இடத்தில் முன்னிலையில் உள்ளன. பாஜகவின் எழுச்சி காரணமாக காங்கிரஸைச் சேர்ந்த 10 மத்திய அமைச்சர்கள் உள்பட முக்கிய வேட்பாளர்கள் பலரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். சுஷில்குமார் ஷிண்டே, சச்சின் பைலட், சல்மான் குர்ஷித், கபில் சிபல், அஜய் மாக்கன், பல்லம் ராஜு, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட அமைச்சர்களும் மக்களவைத் தலைவர் மீரா குமாரும் தோல்வியைச் சந்தித்தவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இதேபோல், சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தோல்வியடைந்து விட்டார். எனினும், உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும்வெற்றி பெற்றுள்ளனர்.

மக்களின் அமோக ஆதரவு பாஜகவுக்கு கிடைத்துள்ளது.அவர்களுக்கு எனது வாழ்த்துகள். காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ளது. கட்சிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்தத்தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்வோம். கட்சியின்
துணைத்தலைவர் என்ற வகையில் இந்த தேர்தல் தோல்விக்கான பொறுப்பை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.