சனி, 24 மே, 2014

கல்வியில் சாதித்து வரும் தர்மபுரி மாவட்டம் : மாவட்ட மக்கள் பெருமிதம்

தமிழக அளவில், தர்மபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை இருந்தது. அது, தற்போது மாறிவிட்டது.தர்மபுரி மாவட்ட மாணவ, மாணவியர் தொடர்ந்து கல்வியில் சாதனை படைத்துள்ளனர்.

தொடர்ந்து, ஆறாவது முறையாக, மாநில அளவில் மாணவ, மாணவியர்
சாதித்து வருவது, தர்மபுரி மாவட்டத்துக்கும், எங்கள் பள்ளிக்கும், பெருமையாக உள்ளது,'' என,ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கல்வி நிறுவனத்தின் தாளாளர் மணிவண்ணன்கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
தமிழக அளவில், தர்மபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை இருந்தது. அது, தற்போது மாறிவிட்டது. எங்களது, ஸ்ரீவிஜய்வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர்,எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், ஆறு ஆண்டுகளாக, மாநில அளவில், தொடர்ந்து அதிக மதிப்பெண்பெற்று, சாதனை படைத்து வருகின்றனர்.
இந்தாண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், எங்கள் மாணவியர் அக்ஷயா, மைவிழி, ஸ்ரீவந்தனா,சந்தியா ஆகியோர், 499 மதிப்பெண் பெற்று, மாநில அளவில், முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.மேலும், கவுசல்யாஸ்ரீ, நித்யஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராகவி ஆகிய நான்கு மாணவியர், 498 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். கவுசிக், ஸ்ரீவினிதா ஆகியோர், 497 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடம்
பிடித்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.தமிழக அளவில், முதல், மூன்று இடங்களை பெற்று, தர்மபுரி மாவட்டத்துக்கும், எங்கள் பள்ளிக்கும்பெருமை சேர்த்த மாணவர்களுக்கு, எங்கள் கல்வி நிறுவனம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு கூறினார்.

ஸ்ரீ விஜய்வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் இளங்கோ கூறியதாவது: எங்கள் பள்ளியில், இந்தாண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதிய, 464 மாணவர்களும், தேர்ச்சி பெற்றனர். எங்கள்மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், நான்கு ஆண்டுகளாக, மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று,சாதனை படைத்து வருவது, மகிழ்ச்சியாக உள்ளது.இந்தாண்டு, தீப்தி, கிருத்திகா, ரேவதி அபர்ணா ஆகியோர், 499 மதிப்பெண் பெற்று, மாநில முதலிடம பிடித்து சாதனை படைத்துள்ளனர். அபிஷ்ரேல் நவின்குமாரி ஆகியோர், 498 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாம்இடம் பிடித்துள்ளனர். இவ்வாறு கூறினார்.
தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி தலைவர் செந்தில்கந்தசாமி கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வில், மாநில அளவில்,எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். இந்தாண்டு, தீப்தி, கயல்விழி ஆகிய,இருவரும், 499 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளனர்.மேலும், பிரித்தி ஸ்ரீமதி, பிரதீபா, ஜெயஸ்ரீ, ராசிகா, வருண்யா ஆகியோர், 498 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடமும், ஆர்.லோகேஷ், கே.லோகேஷ், கிருத்திகா, சந்தோஷ், ஸ்ரீநிதி, சுரேந்திரன் ஆகியோர், 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்று, தர்மபுரி மாவட்டத்துக்கும், எங்கள் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக