வெள்ளி, 16 மே, 2014

மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி - முதல்வர் ஜெயலலிதா

மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா: "இந்த தருணத்தில் அனைத்து கட்சி தோழர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

தேசிய அளவில் அதிமுக 3-வது பெரும்பான்மையுடைய கட்சியாக மாற்றியதற்கு நன்றி. மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கும் கட்சி தோழர்களுக்கும் எனது நன்றி.

நாங்கள் தந்த வாக்குறுதிகள் தமிழக மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைகாக நாங்கள் உழைப்போம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். முழுமையான முடிவுகள் வெளிவந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கலாம்." இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மோடிக்கு வாழ்த்து:

நரேந்திர மோடி பிரதமராவதற்கும், மத்தியில் பாஜக ஆட்சி அமைவதற்கும் தனது வாழ்த்துகளை பதிவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.